நாட்டின்போக்கை மோடியால் மட்டுமே மாற்றியமைகக் முடியும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பேசியதாவது:-

நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் மோடியை நம்பிக்கையுடன் எதிர் பார்க்கின்றனர். அவருக்கு உங்கள் ஆதரவுதேவை. உ.பி., மக்களின் ஆதரவை பெறும் வரையில், எதிர்கால இந்தியாவை எங்களால் மாற்றியமைக்க முடியாது.

நாட்டுக்காக காங்கிரஸ் கட்சி எதுவுமே செய்யவில்லை. நமது தேசியக்கொடியின் மேன்மையை அவர்கள் பாதுகாக்கவில்லை.

உ.பி.,யில் ஏராளமான தொழிற்சாலைகள் ஏன்மூடப்பட்டுள்ளன? இதற்கு பகுஜன்சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சிகளேபொறுப்பு. மோடி தலைமையில் குஜராத் முன்மாதிரி மாநிலமாக உருவெடுத்துள்ளது. நாட்டின்போக்கை மோடியால் மட்டுமே மாற்றியமைகக் முடியும் என்று அவர் பேசினார்.

Leave a Reply