நிலம் கையகப்படுத்தும் மசோதாதொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பாஜக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் மறுத்துள்ளார்.

ஹரியானாவின் சோனிபட்டில் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் இந்தமசோதா நிறைவேற பாஜக ஒத்துழைக்கவில்லை என ராகுல்காந்தி கூறுவது உண்மையில்லை.

மசோதா நிறைவேற உதவியதற்காக, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம்ரமேஷ் தம்மை பாராட்டிப் பேசியதை, சுஷ்மா சுட்டிக்காட்டினார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் அனைத்து நாட்களில் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில்லை எனவும் சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்தார்.

Leave a Reply