சத்தீஸ்கர் மாநில  பா.ஜ.க  வேட்பாளர் பட்டியல் வெளியிடு  சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் 67 வேட்பாளர்களின் முதல்பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது.

இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பாஜக பொதுச்செயலர் அனந்த்குமார் கூறியதாவது;

67 வேட்பாளர்களில் 21பேர் புதுமுகங்களாவர். பட்டியலில் 34 இளைஞர்களும் 6 பெண்களும் அடங்குவர். தற்போது எம்எல்ஏ.க்களாக இருக்கும் 9பேருக்கு மீண்டும் தேர்தலில்போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றார்.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் ராஜஸ்தான், ம. பி., தில்லி, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

இதில் சத்தீஸ்கரில் நவம்பர் 11 மற்றும் 19 ஆகியதேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

Leave a Reply