மற்ற நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடுகுறித்தும் பிரதமர் மன்மோகன்சிங் விரிவாக விளக்கம் அளிக்கவேண்டும் என பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து தில்லியில் செய்தியாளரிடம் அவர் கூறியதாவது :

ஆதித்யபிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டவிவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அளித்த விளக்கத்தை பா.ஜ.க வரவேற்கிறது.

நிலக்கரித்துறையை தன்வசம் அவர் வைத்திருந்த 2006-09 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் செய்யப்பட்ட நிலக்கரிச்சுரங்கங்கள் ஒதுக்கீடு குறித்தும் பிரதமர் விளக்கம் தர வேண்டும் என்றார்.

Leave a Reply