கர்நாடகா முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சி தலைவருமான எடியூரப்பா பாஜக கூட்டணியில் சேர விரும்புவதாக பாஜ மேலிடத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களுரில் கஜக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெறுவது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, பாஜக . மூத்த தலைவர் அத்வானி, கட்சி தலைவர் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் மொத்தமுள்ள 29 எம்.பி தொகுதிகளில் 10தொகுதிகளில் பாஜக கூட்டணியுடன்சேர்ந்து போட்டியிட விரும்புவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Leave a Reply