எல்லை தாண்டிய தீவிரவாதத்தை நிறுத்தாத வரை, பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என பாஜக வலியுறுத்தியுள்ளது.டெல்லியில் நேற்று நடைபெற்ற கட்சிநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இதனை தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதசெயல்களை நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்காதவரை பாகிஸ்தானுடன் பேசமுடியாது என பிரதமர் மன்மோகன் கூறியிருப்பதை ராஜ்நாத் நினைவுகூர்ந்தார்.

பேச்சுவார்த்தையும், தீவிரவாதமும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்துச்செல்ல முடியாது
காஷ்மீரின் ஒருபகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளதால், அந்தப்பிரச்சனை தொடர்பாக மட்டும் அந்நாட்டுடன் தற்போதுபேசலாம் . பாகிஸ்தான் விவகாரத்தில், இந்தியா பலவீனமான வெளிநாட்டு கொள்கையை பின்பற்றிவருகிறது.

இந்திய ராணுவ வீரர்களின் தலையை கொய்த பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதசெயல்கள் பாகி்ஸ்தான் மண்ணில் இருந்து தூண்டப்‌படுவது நிறுத்தப்படாதவரையில் அந்நாட்டுடன் மத்திய அரசு பேசக்கூடாது என்றும் ராஜ்நாத்சிங் வலியுறுத்தினார்.

Leave a Reply