ஊழல்வழக்கில் சிறை தண்டனைபெற்ற மாநிலங்களவை காங்கிரஸ் எம்பி. ரஷீத் மசூதின் பதவி பறிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை மாநிலங்களவை தலைவர் ஹமீதுஅன்சாரி மேற்கொண்டார்.

குற்றவியல் வழக்கில் இரண்டு அல்லது அதற்கு அதிகமான ஆண்டுகள் தண்டனைபெறும் மக்கள் பிரதிநிதிகள் அந்த பதவியை வகிக்கத் தகுதியில்லை என உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. அந்த தீர்ப்பின்படி அதிகாரப் பூர்வமாக எம்.பி. தகுதியை இழக்கும் முதல் நபர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரஷீத்மசூத் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply