'உங்கள் குரல் - உங்கள்தேர்தல் அறிக்கை பாஜக.வின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின்பு தமிழ்நாடு உள்ளிட்ட பலமாநிலங்களில் மோடி பேசும் பொதுக் கூட்டங்களில் ஏராளமான மக்கள் குவிந்து வருகின்கின்றர்.

இந்நிலையில், பாஜக. வெளியிடவுள்ள பாராளுமன்றதேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறவேண்டும் என்பவை குறித்து பொதுமக்கள் தங்கள்கருத்தை தெரிவிக்கும் வகையில் மோடியின் ‘டுவிட்டர்’ பக்கம் வாயிலாக தனிஇணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்புக்குள்சென்று தேர்தல் அறிக்கை எவ்வாறு அமையவேண்டும் என பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று மோடி ‘டுவீட்’ செய்துள்ளார். ‘உங்கள் குரல் – உங்கள்தேர்தல் அறிக்கை’ என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply