அரசியல்வாதிகள், அரசியல்கட்சிகளின் இணைய தளங்கள், டுவிட்டர் கணக்குகளை கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது.

ஐந்துமாநில சட்டசபை தேர்தலின் போது எந்தவிதமான விதிமீறலிலும் இவர்கள் ஈடுபடாத வகையில் கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது .

இந்தமுடிவின்படி 6 கட்சிகளை தேர்தல் ஆணையம் தெரிவுசெய்து அவற்றின் இணைய தளங்களைக் கண்காணிக்கவுள்ளது.

அதேபோல 18 அரசியல் தலைவர்களையும் தெரிவுசெய்து அவர்களின் இணையதளங்கள், டுவிட்டர் பக்கங்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்தப் பட்டியலில் நரேந்திர மோடி, சிவராஜ்செளகான், சோனியாகாந்தி, திக்விஜய்சிங், உமாபாரதி, சுஷ்மா சுவராஜ், ராகுல்காந்தி, அத்வானி, சசிதரூர், நிதின்கத்காரி, ரவிசங்கர் பிரசாத், ஷானவாஸ் ஹுசேன், ராஜ்நாத்சிங், ராஜீவ்சுக்லா, முக்தர் அப்பாஸ் நக்வி, உமர் அப்துல்லா, அஜய்மேக்கன், எடியூரப்பா ஆகியோர் உள்ளனர்.

அதேசமயம் அரசியல் தலைவர்கள் கட்சிகளின் பேஸ்புக்கை கண்காணிக்கும் அளவுக்கு விதிமீறல் இருப்பதாக தெரியவில்லை என தேர்தல் ஆணையம் கருதுவதால் இந்த லிஸ்ட்டில் பேஸ்புக் இடம்பெறவில்லை.

Leave a Reply