லோக்சபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்த வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சுப்பிரமணிய சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
லோக்சபைக்கு அடுத்தாண்டு மேமாதம் தேர்தல் நடக்க உள்ளது. அரசியல்கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக உள்ளன. இந்நிலையில் லோக்சபைக்கு முன்கூட்டியே தேர்தல்நடத்த பிரதமரை ஜனாதிபதி கேட்டுக்கொள்ள வேண்டும் என்றார். பிரதமர் மன்மோகன்சிங் ஒரு நியமன பிரதமர். அவர், வெளிநாடுகளுக்குசென்று பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட மட்டும் உள்ளார். இதனால் நாட்டிற்கு அதிகபலன் ஏற்படப்போவதில்லை என்று சுப்பிரிமணிய சாமி கூறினார்.
நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது . ஒருகிலோ வெங்காய விலை மீண்டும் ரூ.100ஐ தாண்டும் அளவுக்கு உள்ளது. இதர அத்தியாவசியபொருட்கள் விலையும் உயர்ந்து விட்டது. அதனால் லோக்சபையை கலைத்து விட்டு விரைவில் தேர்தல்நடத்த மன்மோகன்சிங்கை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தவேண்டும் என்று சுப்பிரமணிய சாமி மேலும் கூறினார். லோக்சபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தினால் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசம் அடைவதை தடுத்துநிறுத்தலாம். ரூபாய் மதிப்பு அடியோடு சரிந்து விட்டது. இதற்கும் விலைவாசி உயர்வுக்கும் மத்திய அரசின் தவறான பொருளாதாரகொள்கைகளும் எங்கும் இல்லாத ஊழல்களும் தான் முக்கிய காரணமாகும் என்று சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.