இந்தியாவிலேயே மிக நீளமான மெட்ரோ பேருந்து சாலையை திறந்தார் செளகான் இந்தியாவிலேயே மிக நீளமான மெட்ரோ பேருந்து சாலை என்றபெயரை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அமைக்கப்பட்டுள்ள சாலை பெறுகிறது. இந்த நீண்டநெடிய சாலைக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மைபஸ் என்று இந்த பஸ் போக்குவரத்துக்கு

பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேகசாலைக்கு வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியின்கீழ் உள்ள மத்திய பிரதேசத்தில், இந்தசாலை திறக்கப்பட்டுள்ளது

போபால் நகரில் 24 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த பஸ்பாதை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிகநீளமான பிரத்யேக போக்குவரத்து பாதை இதுதான்.

போபாலில் நடந்த நிகழ்ச்சியில் இந்தபாதையை முதல்வர் சிவராஜ்செளகான் திறந்து வைத்து, வாஜ்பாய் பெயரை சூட்டுவதாக அறிவித்தார்.

இந்த விழாவின் போது நகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 26 புதியகுளிர்சாதன தாழ்தள பேருந்துகளையும் அறிமுகப்படுத்தினார் செளகான்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள மைபஸ் போக்குவரத்தில், 24 கிலோ மீட்டர் தூரத்தை அரைமணி நேரத்துக்குள் கடந்துவிடலாம். இதற்கான பயணக்கட்டணம் ரூ. 26 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply