பிரதமரின் வெளிநாட்டு பயணம் அரசு பணத்தை வீணடிக்கிறது சிக்கன நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவேண்டும்’ என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அறிவுறுத்திவரும் வேலையில், பிரதமர் மன்மோகன்சிங் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுவருவது வியப்பாக உள்ளது அமெரிக்காவுக்கு அதிகபட்சமாக பயணம் மேற்கொண்டு வருவது,

அந்நாட்டின்மீது அவருக்கு பிரியம் உள்ளதை காண்பிக்கிறது என பா.ஜ.க துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ்நக்வி தெரிவித்தார்.

இதுதொடர்பாக நக்வி செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை கூறியது: பிரதமர் மன்மோகன்சிங் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருவதால் அரசுப்பணம் வீணடிக்கப்படுகிறது. இது கண்டனத்துக்குரியது. அமெரிக்காவுக்கு அதிகபட்சமாக பயணம் மேற்கொண்டு வருவது, அந்நாட்டின்மீது அவருக்கு பிரியம் உள்ளதை காண்பிக்கிறது.

பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்பமொய்லி சிக்கன நடவடிக்கையாக மெட்ரோ ரயிலில் சென்றார். அவரைத்தவிர வேறு எந்த அமைச்சர்களும் இதை பின்பற்றவில்லை. தற்போது பிரதமர் மன்மோகன்சிங் சீனா, ரஷியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதால் இந்தவிவகாரம் குறித்து மேலும் கருத்துதெரிவிப்பது சரியாக இருக்காது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்புடன், மன்மோகன்சிங் சந்தித்த பின்பு எல்லைப் பகுதியில் இந்தியா மீதான தாக்குதல் 200 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுக போரை தொடர்ந்துள்ளதாக தெரிகிறது. நவாஸ் ஷெரீப்புடனான சந்திப்பால் என்ன பயன் கிடைத்துள்ளது என்பதை பிரதமர் விளக்க வேண்டும் என்றார் நக்வி.

Leave a Reply