டில்லி சட்ட சபை தேர்தலில், பா.ஜ.க முதல்வர்வேட்பாளராக ஹர்ஷ வர்த்தன் அறிவிக்கப்பட்டார். இதனை தேசியதலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

டில்லி உள்ளிட்ட 5மாநில சட்டசபைதேர்தல் தேதிகள் கடந்த 4-ம் தேதி அறிவிக்கப்பட்டது. டில்லியில் காங்கிரசின் ஊழல் ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க மிகுந்த கவனத்துடன் இங்கு வியூகம் வகுத்துவருகிறது.

இந்நிலையில், டில்லியில் இன்று பாஜக .பார்லி.போர்டுகூட்டம் நடந்தது.இதில் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் அத்வானி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர், டில்லி சட்ட சபை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக ஹர்ஷ வர்த்தனை, ராஜ்நாத் சிங் , அறிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், முதல்வர் வேட்பாளராக, விஜய் கோயல், ஹர்ஷ வர்த்தன் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியாக, ஹர்ஷ வர்த்தன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதானல் பாஜக.வில் பிளவு எதுவும்இல்லை. டில்லியில் ஆட்சிசெய்த, பா.ஜ.வின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்து சிறப்பாகசெயல்பட்டவர் ஹர்ஷ வர்த்தன்.

கூட்டத்தில் கலந்துகொண்ட ஹர்ஷவர்த்தனுக்கு, பாஜக தலைவர்கள் வாழ்த்துதெரிவித்தனர். முதல்வர்வேட்பாளராக அறிவிக்கபடும் என எதிர்பார்த்த விஜய் கோயல், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹர்ஷவர்த்தனுக்கு வாழ்த்துதெரிவித்தார்.

Leave a Reply