ராகுல் காந்தியின் நடவடிக்கை துரதிருஷ்ட வசமானது இந்திராகாந்தி கொல்லப்பட்ட சம்பவத்தைக்கூறி வாக்குசேகரிக்கும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் நடவடிக்கை துரதிருஷ்ட வசமானது என்று பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; இரண்டு முறை ஆட்சிப்பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகளைக் கூறி வாக்குசேகரிக்க முடியாத நெருக்கடியில் ராகுல்காந்தி உள்ளதால் இவ்வாறு பேசுகிறார்.இதுபோன்ற உணர்ச்சிகரமான பேச்சுகளை வாக்காளர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்றார் ரவிசங்கர்பிரசாத்.

Leave a Reply