கர்நாடகாவின் பெங்களூருவில் 2008 ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், அப்துல்நாசர் மதானிக்கு ஜாமீன் வழங்குவதற்கு ஏதுவாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு உறுதிச்சான்று அளிப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக. மாநில செய்தித் தொடர்பாளர் வி வி.ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெங்களூரு நீதிமன்றத்தில் மதானி ஆஜராகும் போது, அவருக்கு ஜாமீன்கிடைக்கும் பொருட்டு உச்சநீதிமன்றத்தில் உறுதிச்சான்று அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அரசின் இந்த நடவடிக்கையை பாஜக கடுமையாக எதிர்க்கும்’

மக்களவை தேர்தலை கருத்தில்கொண்டு இடதுசாரி முன்னணிவசம் தற்போது இருக்கும் மலப்புரம் மாவட்டம் பொன்னானி மக்களவை தொகுதியை கைப்பற்றும் எண்ணத்தில் மதானிக்கு அரசு உதவமுன்வந்துள்ளது.

பாரதீய விசாரகேந்திரம் இயக்குநர் பரமசிவம் கொலை முயற்சி தொடர்பாகவும் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரான அப்துல் நாசர்மதானி மீது வழக்கு உள்ளது. மதானிக்கு ஜாமீன்கிடைத்தால் இந்த வழக்கின் விசாரணையை நாசமாக்கி விடுவார் என்றும் விவி.ராஜேஷ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply