பா.ஜ.க.,வை விமர்சிக்க ராகுல் காந்திக்கு எந்த உரிமையும் இல்லை பாஜகவிற்கு நாட்டின் நலனேமுக்கியம். அதற்காகவே நாங்கள் தியாகங்களை, தவமாகசெய்து வருகிறோம் என்று பாஜகவின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

வகுப்புவாத பிரிவினையை தூண்டுவதாக பா.ஜ.க மீது ராகுல்காந்தி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலடிகொடுக்கும் விதமாக, டெல்லியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது, நிதின் கட்காரி இதனை தெரிவித்தார்.

மேலும் அவர், பா.ஜ.க.,வை பொறுத்த வரை நாட்டுக்கு தான் முதலிடம், பின்னர்தான் கட்சி அதனைத்தொடர்ந்தே தன்னலத்திற்கு இடம். ராகுல்காந்தி தெரிவித்துள்ள கருத்து துரதிருஷ்டவசமானது. எங்கள்கட்சி குறித்து இத்தகைய கருத்தைதெரிவிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை. பா.ஜ.க.,வில் ஷர்மாபிரசாத் முகர்ஜி, உஷாபாவ் தாக்கரே, அடல் பிஹாரி வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பல தலைவர்கள் நாட்டுக்காக பலதியாகங்களை செய்துள்ளனர். பாஜகவிற்கு நாட்டின் நலனேமுக்கியம். அதற்காகவே நாங்கள் தியாகங்களை, தவமாகசெய்து வருகிறோம் என்றார்.

Leave a Reply