காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என்ற தீர்மானத்தை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம் பாஜக – வின் நிலைப்பாட்டினை ஏற்று தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியமைக்கு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.என்று பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ; காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தப்படக் கூடாது மீறி நடத்தப்பட்டால் இலங்கையின் தலைமை ஏற்று இரண்டு ஆண்டுகளுக்கு செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதால் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. பாஜக – வின் நிலைப்பாட்டினை ஏற்று தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியமைக்கு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். தமிழக முதல்வர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் இத்தீர்மானம் நிறைவேற உறுதுணையாக இருந்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாஜக – வின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Leave a Reply