காங்கிரஸ் கட்சி தான் ஆங்கிலேயர்களின் பிரிவினைவாத கொள்கைகளை பின்பற்றிவருகிறது ராஜஸ்தானில் பேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, வெறுப்பு அரசியலை பா.ஜ.க நாட்டில் விதைத்துவருகிறது. இது மதச்சார்பற்ற கட்டமைப்புகளுக்கு ஊறுவிளைக்கும் என கூறினார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் . காங்கிரஸ் கட்சி தான் மதவாத கொள்கையுடன் செயல்படும் முக்கியமான வகுப்புவாதகட்சி என கண்டித்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்நாத்சிங் மேலும் கூறியதாவது:-

மிகப் பெரிய வகுப்புவாத கட்சியாக காங்கிரஸ்தான் நாட்டில் செயல்படுகிறது. அந்த கட்சி தான் ஆங்கிலேயர்களின் பிரிவினைவாத கொள்கைகளை பின்பற்றிவருகிறது. சுதந்திரத்திற்கு பிறகும்கூட காங்கிரசார் அதை கைவிடாமல் பின்பற்றி வருகின்றனர்
என்று அவர் கூறினார்.

Leave a Reply