சுனாமியினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப் படாததை கண்டித்து, பாஜக மீனவர் அணிசார்பில், சாலையில் படுத்துறங்கும் போராட்டம் சென்னையில் நடந்தது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக குடியிருப்புகள்கட்டி முடித்தபின்னரும், பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட வில்லை எனக்கூறி, பாஜக மாநிலசெயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தலைமையில் இந்தபோராட்டம் நடத்தப்பட்டது. பட்டினப்பாக்கம்- நொச்சிக்குப்பம் சாலையில் நடந்தபோராட்டத்தில் பங்கேற்ற 400க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கடந்த 2004ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிரந்தரகுடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, நிரந்தரகுடியிருப்புகள் கட்டி முடிக்கப்படும் வரை ஓராண்டிற்குமட்டும் தங்கும் வகையில் தற்காலிக வீடுகள் கட்டித்தரப்பட்டன. ஆனால், நிரந்தரகுடியிருப்புகள் கட்டப்பட்டு பலமாதங்களாகியும் அவை மீனவர்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்படவில்லை. இதனால், தற்காலிக குடியிருப்புகளிலேயே மீனவர்கள் தொடர்ந்து வசித்துவருகின்றனர். அந்த, குடியிருப்புகளும் சிதிலமடைந்து விட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply