நாளைமறுநாள், பாட்னாவில் நடக்கவிருக்கும், பாஜக ,வின் கர்ஜனைப்பேரணி, பீகார் இதுவரை சந்தித்திராத, மிகப்பெரியதாக இருக்கும், என்று பாஜக ., மூத்த தலைவர்களில் ஒருவரான, ரவிசங்கர்பிரசாத் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பாஜக ., பிரதமர்வேட்பாளர், நரேந்திரமோடி இதுவரை பங்கேற்ற பிரமாண்டபேரணிகள் நடைபெற்ற, ஐதராபாத், திருச்சி, ரேவாரி போன்ற இடங்களில் நடைபெற்ற கூட்டங்களைவிட, பாட்னாவில், நாளைமறுநாள் நடைபெற இருக்கும், ஹுங்கர்பேரணி, மிக பிரமாண்டமாக அமையும்.

லட்சக்கணக்கான, பா.ஜ.க.,வினர் இதில்பங்கேற்க உள்ளனர். இந்த மாநில அரசியலை மாற்றும் விதத்தில், மோடியின்பேரணி அமையும். மோடியால்தான், இந்த நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்ல முடியும் என நம்பும் பொதுமக்களும், ஏராளமாக பங்கேற்க உள்ளனர்.

பா.ஜ.க, தலைமையிலான கூட்டணியை முறித்துக்கொண்ட, பீகார் முதல்வர், நிதிஷ் குமாருக்கு எதிராக, அவர்சார்ந்துள்ள, ஐக்கிய ஜனதாதளம் கட்சியில், பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆட்சியை தக்கவைக்க அவர், காங்கிரசின் ஆதரவை நாடியுள்ளார். என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Leave a Reply