தங்களது உண்மை நிறத்தை ஒரு பக்கம் மறைத்துக் கொண்டே தங்களை உத்தமர்கலாகவும், கறை படியாத கைகளுக்கு சொந்தக் காரர்களாகவும் காட்டிக்கொள்ளும். மதச்சார்பின்மை என்ற போர்வையில் இந்து மதம் தவிர்த்து மற்ற உலக மதங்கள் அனைத்துக்கும் சலாம்போடும் கம்யூனிஸ்ட்களின் மத்தியில், தாங்களும் அப்படித்தான் என்று தனது உண்மை முகத்தை காட்டியுள்ளார் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சமர் ஆச்சார்ஜி என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித்தலைவர்.

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவர் சமர் ஆச்சார்ஜி. 42 வயதாகும் இவர் பில்டிங் காண்டிராக்டர் தொழில் செய்துவருகிறார்.

திரிபுரா தலைநகர் அகர்தாலாவில் மாநகராட்சி கட்டிடபணிகளை இவர் காண்டிராக்ட் எடுத்து செய்து கொடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அகர்தாலா மாநகராட்சிக்குட்பட்ட 3 வார்டுகளில் கக்கூஸ்களை கட்டுவதற்க்கான ஒப்பந்தங்களை பெற்றார்.இதன் மூலம் தனக்கு ரூ.2½ கோடி லாபம் கிடைத்ததாக அவரே கூறியுள்ளார். அதாவது கக்கூஸ் காண்டிராக்ட்டிலேயே பலகோடிகளை கம்யூனிஸ்ட்களாலும் குவிக்க முடியும் கம்யூனிஸ்ட்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் நிருபித்துள்ளார்.

மேலும் பணக்கட்டுகளையே படுக்கையாக மாற்றி, அதன் மேல் படுத்துறங்கி போஸ் குடுத்த வீடியோ காட்சியும் வெளியாகியுள்ளது. அதில் பணம் மீது படுத்து தூங்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. இதற்காக வங்கியில் இருந்து ரூ.20 லட்சம் எடுத்து வந்து படுக்கையில் பண நோட்டுக்களை தூவினேன். மேலும் கம்யூனிஸ்ட் தலைவர்களில் பலர் பல கோடி சொத்து வைத்துள்ளனர். ஆனால் வெளியில் எளிமையானவர் போல வேஷம் போடுவார்கள். நான் அப்படி வாழ விரும்பவில்லை'' என்றும் திருவாய் மலர்ந்துள்ளார்.

கம்யூனிஸ்ட்களின் இரட்டை வேடம் இதைபோன்று எத்தனையோ எத்தனையோ, பார்ப்பனியம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு இந்து மதத்துக்குள்ளேயே பிளவை ஏற்ப்படுத்துவதும். சீனா அத்துமீறி இந்துயாவுக்குள் நுழைந்தாலும் அதை கண்டும் காணாமல் இருப்பதும், அதே அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமான ஒப்பந்தங்களாக இருந்தாலும் அதை கண்மூடித் தனமாக எதிர்ப்பது. என்று எத்தனையோ எத்தனையோ காரணங்களை அடிக்கிக்கொண்டே போகலாம்.

இந்தியாவில் குழந்தை திருமணத்துக்கு பார்ப்பனியமே காரணம் என்பார்கள் , ஆனால் உலகிலேயே குழந்தை திருமணம் அதிகம் நடைபெறும் இஸ்லாமிய நாடான பங்களாதேஸில் எங்கே பார்ப்பனியம் இருக்கிறது என்றால் பதில் தரமாட்டார்கள்.

மதமோ கடவுளோ இல்லை என்பார்கள் ஆனால் திருவனந்தபுரத்தில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் நிறுவப்பட்டிருந்த கண்காட்சியில் மார்க்ஸ், லெனின், சேகுவேரா படங்களோடு ஏசுவின் ஓவியத்தையும் வைத்து தங்கள் மதச் சார்பின்மையை காட்டுவார்கள்.

அமெரிக்காவின் உதவி பெற்ற செய்தாப்பூர் அணுஉலை மிகவும் ஆபத்தானது என்று எதிர்ப்பு தெரிவிப்பார்கள் . அதே நேரத்தில் ரஷ்யாவின் உதவி பெற்ற கூடங்குளம் அணுஉலைத் திட்டத்துக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள். கதிர்வீச்சு பாதிப்புகளுக்கும் கம்யூனிஸம முதலாளித்துவம் என வேறுபாடுகள் இருக்கிறதா என்றால் இதற்கும் பதில் தரமாட்டார்கள்.

ஆக மொத்தத்தில் இந்திய கம்யூனிஸம் முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பதையே ஏசுவின் ஓவியங்களும் , செய்தாப்பூர் அணு உலைகளும் காட்டிவந்தன , இப்போது அதில் புதிதாக பண மெத்தைகளும் சேர்ந்துவிட்டன அவ்வளவே .

தமிழ் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply