உ.பி., யில் வரும் நவம்பர் 8-ந் தேதி குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் அதிக அளவிலானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுவதால் கூட்டத்திற்கான இடம் மாற்றப்பட்டுள்ளது.

பராய்ச்நகரில் உள்ள கேண்ட்கர் மைதானத்தில் மோடியின் பொதுக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் அதிகளவில் மக்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மோடியின் பொதுக்கூட்டம் பராய்ச் புறநகரில் உள்ள பெரியளவிலான தனியார் மைதானத்திற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூட்ட அமைப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான முகுந்த்புகாரி வர்மா தெரிவித்துள்ளார்.

Leave a Reply