நாட்டின் வளர்ச்சிக்கு நரேந்திர மோடி பிரதமர் ஆவது அவசியம். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் இரும்புமனிதராக நரேந்திர மோடி திகழ்கிறார் என கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்

பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியதாவது:

நாட்டில் மாற்றத்திற்கான சூறைக் காற்று பலமாக வீசி வருகிறது. மக்கள் நாட்டின் பாதுகாப்பிலும், பொருளாதார வளர்ச்சியிலும் அதிக அக்கறை கொண்டுள்ளனர். மத்தியில் ஆளும்காங்கிரஸ் கட்சியினர் இந்த இரண்டிலும் கோட்டைவிட்டுள்ளனர். எனவே மக்கள் நரேந்திரமோடியின் தலைமையை ஆவலாக எதிர் பார்த்துள்ளனர். நாட்டின் பாதுகாப்பிற்கும், பொருளாதாரவளர்ச்சிக்கும் நரேந்திரமோடி பிரதமர் ஆவது அவசியம். நாட்டின் உள்ளேயும், வெளியேயும் பயங்கரவாதம் தலை தூக்கியுள்ளதால் நாட்டின் பாதுகாப்பு கவலையளிப்பதாக உள்ளது. காங்கிரஸ்கட்சி மற்றகட்சிகளுடன் அரசியல் செய்வதில் தவறில்லை.

ஆனால் நாட்டின் பாதுகாப்புவிஷயத்தில் அலட்சியம் காட்டுவதும், அரசியல்செய்வதும் சரியல்ல. சர்தார் வல்லபாய்பட்டேலுக்கு அடுத்து நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் இரும்புமனிதராக நரேந்திர மோடி திகழ்கிறார் என்றார் அவர்.

Leave a Reply