குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், சர்தார் வல்லபாய்படேல் நினைவு அறக்கட்டளை சார்பில், சர்தார் வல்லபாய் படேல் அருங் காட்சியகம் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்புவிழா, வருகிற 29ந் தேதி நடைபெறுகிறது. அதில், பிரதமர் மன்மோகன் சிங்கும், பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியும் கூட்டாக கலந்துகொள்கிறார்கள்.

இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை, படேல் நினைவு அறக்கட்டளை தலைவரும், மத்திய அமைச்சருமான திண்ட்சாபடேல், நரேந்திரமோடியிடம் வழங்கி, அழைப்புவிடுத்தார். பிரதமர், தலைமை விருந்தினராகவும், மோடி சிறப்புவிருந்தினராகவும் பங்கேற்பதாக அழைப்பிதழில் குறிப்பிடபட்டுள்ளது.

Leave a Reply