முசாபர்நகர் கலவரம் குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்த கருத்து தொடர்பாக, பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார்தெரிவித்துள்ளது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசும்போது,

முசாபர்நகர் வகுப்பு கலவரத்திற்கு பாஜக.,வே காரணம் என்றும் கலவரத்தை பாஜக.,வே தூண்டிவிட்டதாகவும் கூறியிருந்தார். ராகுலின் இந்தபேச்சு தேர்தல்நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார்தெரிவித்துள்ளது.

முசாபர்நகர் கலவரம் குறித்த விசாரணை இன்னும் முடிவடையா நிலையில் துளியளவு ஆதாரமும் இன்றி பாஜக மீது ராகுல் குற்றம்சுமத்துவதாக தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப் பட்டுள்ளது. பா.ஜ.க.,வின் புகார் தொடர்பாக ம.பி., தேர்தல் ஆணையம் உடனடியாக விசாரணையை துவங்கி விட்டதாக மாநில தேர்தல் அதிகாரி ஜெய்தீப்கோவிந்தா தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply