தந்தி டீவியில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் 68% சதவீத மக்கள் காங்கிரஸ் தான் மதவாத அரசியல் செய்கிறது என்று வாக்களித்தனர்.

சென்ற வாரம் ஒரு விவாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னனி பிரமுகர் வீரபாண்டியன் அவர்கள் மிகவும் கீழ்தரமான முறையில் சிறுபான்மையின தாஜா வேலையில் ஈடுபட்டார்.

பாபர் மசூதி இருக்கும் இடம் ராம ஜென்ம பூமி இல்லை என்றும் பாபருக்கு முன் வந்த இஸ்லாமிய மன்னர்கள் எந்த கோவிலையும் இடிக்கவில்லை என்றும் அதே போல் தான் பாபரும் எந்த கோவிலையும் இடிக்கவில்லை என்று கூறுகிறார்.

இந்த கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரஸூக்கும், திராவிட கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்தில் மட்டும் வரலாறு மறந்து விடுகிறது. உலக வரலாறு பதிவு செய்தது மட்டும் 60,000 இந்து திருக்கோவில்களை இஸ்லாமிய மன்னர்கள் இடித்திருக்கிறார்கள் அல்லது அவர்கள் வழிபாட்டு தலங்களாக மாற்றியிருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன், அரேபியாவிலிருந்து படையெடுத்து வந்த அனைத்து இஸ்லாமியர்களும் குஜராத்திலுள்ள சோமநாதர் ஆலயத்தை இடித்ததும் கொள்ளையடித்ததும் மறந்து விட்டதா இந்த போலி மதசார்பற்றவர்களுக்கு? சோம நாதர் ஆலயத்திலிருந்த சிவலிங்கத்தை காலில் மிதித்தானே அந்த மூர்க்க அரச(க்க)ன் கஜினி முகமது, அதை மறந்து விட்டார்களா இந்த போலி மதசார்பற்றவர்கள்?

இந்தியாவில் பயங்கரவாதம் உருவானதே 1992ல் பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு தான் என்று கூறுகிறார்கள் இந்த போலி மதசார்பற்றவர்கள். மசூதி இடிப்பிற்க்கு பழி தீர்க்கும் நடவடிக்கையாகத் தான் இந்தியாவில் பயங்கரவாதம் வளர்ந்துள்ளதாக கூறுகிறார்களே இந்த போலி மதசார்பற்றவர்கள், 1989ல் காஷ்மீரில் 13 திருக்கோவில்கள், 1990ல் 9 திருக்கோவில்கள், 1991ல் 16 திருக்கோவில்கள், 19ஆம் நூற்றாண்டிற்க்கு முன்பு 60,000 திருக்கோவில்கள் என இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறார்களே, இதற்கு பழி தீர்க்க இந்துக்கள் நினைத்தால் என்னாவது?.  இந்துக்கள் சகிப்புத் தன்மை வாய்ந்தவர்கள் என்பதற்க்கு மற்றுமொரு அடையாளம், இன்று இஸ்லாமியர்கள் இந்தியாவில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பது.

இந்துக்கள் சிறுபாண்மையினரால் கொல்லப்பட்டால் அமைதியாக இருக்க வேண்டும், இந்து திருக்கோவில்கள் இடிக்கப்பட்டால் வாய்திறக்காமல் வேடிக்கை பார்க்க வேண்டும், இது தான் இன்றைய கம்யூனிஸ, காங்கிரஸ், திராவிட கொள்கைகள். இது தான் மதசார்பின்மையா?

இன்று இந்தியாவில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒரு மோதல் போக்கை கடைபிடிக்கிறார்கள் என்றால் அதற்க்கு முக்கிய காரணம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முல்லாயம் யாதவ், மாயாவதி, நிதிஷ் குமார், சரத் பவார் மற்றும் திராவிட கட்சிகள் தான்.

இந்த போலி மதசார்பற்றவர்கள், ஒரு சமயத்தினருக்கு மட்டும் சலுகை வழங்குவது, அவர்களுக்கு மட்டும் அவர்களது மத சட்டம் என்பன போன்ற சம்பவங்கள் தான் இந்துக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

அனைவருக்கும் ஒரே சட்டம் என்பது தான் உண்மையான மதசார்பின்மை, ஆனால் அனைவருக்கும் ஒரே சட்டம் என்று கூறும் பாரதீய ஜனதா கட்சியினரை மதவாதிகள் என்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்?

ஆனால் சில தமிழக மக்கள் உண்மையை அறிந்து விட்டார்கள், தந்தி டீவியில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் 68% சதவீத மக்கள் காங்கிரஸ் தான் மதவாத அரசியல் செய்கிறது என்று கூறியுள்ளனர்.

என்ன நடந்தால் என்ன, உதயசூரியனுக்கும், இரட்டை இலைக்கும், கை சின்னத்திற்க்கும் தான் ஓட்டு போடுவேன் என்று கூறுபவர்களை ஒன்றுமே செய்ய முடியாது.

நாளை இவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகி விடும் என்பதெல்லாம் இவர்கள் யோசிப்பதில்லை. இந்துக்கள் முட்டாள்களாகி விட்டார்களா அல்லது கோழைகளாகி விட்டார்களா? என்று ஒற்றுமையுடன் வீரு கொண்டு எழும் இந்த சமுதாயம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *