பாட்னாவில் தான்பேசிய மேடைக்கு அருகே நடந்த தொடர் குண்டு வெடிப்பு குறித்து தனது பேச்சின்போது எதுவும் குறிப்பிடாத குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, இதுகுறித்து டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் ரயில்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 7 குறைந்த சக்திகொண்ட குண்டுகள் வெடித்ததால் பரபரப்புஏற்பட்டது. ஆனாலும் தனது பொதுக் கூட்ட பேச்சின் போது மோடி இதுகுறித்து எதுவும் கூறவில்லை.

இருப்பினும் கூட்டத்திற்குப் பின்னர் டிவிட்ரில் இது குறித்து அவர் கருத்துதெரிவித்துள்ளார். அதில், பாட்னாவில் நடந்த குண்டு வெடிப்புகள் பெரும் சோகத்தை தருகின்றன. வருத்தம் தருகின்றன. துரதிர்ஷ்ட வசமானது இது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மோடி.

Leave a Reply