பாட்னா குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பே  காரணம் பாட்னாவில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தொடர்குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் நிலையத்தின் நடை மேடை கழிவறையில் முதல்குண்டு வெடித்தது. தொடர்ந்து நரேந்திரமோடி பங்கேற்ற பொதுக்கூட்ட மைதானம், அதனை சுற்றிய இடங்கள், திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள்வெடித்ததில் 6பேர் உயிரிழந்தனர். 100பேர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ள பாஜக சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் நிதிஷ்குமார் அரசு முழுதோல்வி அடைந்து விட்டதாக கூறியுள்ளது.

இதனிடையே குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பாட்னா ரயில் நிலையத்தில் இம்மதியாஸ் என்பவன் உட்பட 3 பேரை போலிசார் கைதுசெய்துள்ளனர். விசாரணையில் யாசின்பட்கலின் கூட்டாளி மோனு என்பவன்தான் பாட்னா குண்டுவெடிப்புக்கு வெடிப்பொருட்களை விநியோகம் செய்ததாக இம்மதியாஸ் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளான். இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி யாசின்பட்கலின் கூட்டாளி முகமது தெக்சின் அக்தர் என்பவன்தான் இந்தசம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதே இயக்கத்தை சேர்ந்தவர்களே அண்மையில் நடந்த புத்தகையா குண்டு வெடிப்பு சம்பத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply