பாட்னா  குண்டு வெடிப்பு உளவுத் துறையின் செயலற்ற தன்மையை காட்டுகிறது பாட்னா தொடர்குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பாஜக.,வின் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மாசுவராஜ் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தியில், ”பாட்னாவில் பாஜக பிரசார கூட்டத்தின் போது வெடிகுண்டுகள் வெடித்துள்ளது கடும்கண்டனத்துக் குரியது.

இந்த சதித் திட்டம் குறித்து முன் தகவல் எதுவும் தெரிவிக்காதது, உளவுத் துறையின் செயலற்ற தன்மையைகாட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார். பா.ஜ.க.,வின் டெல்லி மேல்சபை துணைத் தலைவர் ரவிசங்கர்பிரசாத், ‘8 மாதங்களுக்கு முன்பே தெரிவித்த போதிலும் மாநில அரசுசார்பில் போதுமானபாதுகாப்பு வழங்கப்படவில்லை.

எந்த வித முன் தடுப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. குண்டு வெடிப்பு குறித்து விரைந்து விசாரணை நடத்தி சதிகாரர்களை கண்டுபிடிக்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஆர்எஸ்எஸ். கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கொச்சியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ். கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில் ”தேசத்தின்பாதுகாப்பை பயமுறுத்துவதற்காக தொடர்குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இது தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதிச் செயல் ஆகும். நமது பாதுகாப்புபடையின் உறுதித்தன்மையை இத்தகைய கோழைத்தனமான தீவிரவாதசக்திகள் சீண்டிப்பார்க்கிறது. இதற்கு நிரந்தர தீர்வை காணவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply