ம.பி., சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மீண்டும் பாஜக.,வே வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் என சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றதேர்தலில் பாஜக., 61லிருந்து 71 சீட்கள் பெறும் என்றும் காங்கிரஸ் 16லிருந்து 24 சீட் மட்டுமே பெறும் என அந்த கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.

ம.பி., மாநிலத்தில் நடக்கவுள்ள சட்டசபைதேர்தலில் மீண்டும் பா.ஜ.க.,வே வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.அதாவது, பாஜக.,148லிருந்து 160 சீட்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ்க்கு 52லிருந்து 62 சீட்கள்தான் கிடைக்கும் என்றும் அந்த கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது

Leave a Reply