பீகார் மாநிலம் பாட்னாவில் மோடிபங்கேற்ற பேரணியை குறிவைத்து 7 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த கோரசம்பவத்தில் 6 பேர் பலியாயினர் 83 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் அன்று மாலையே மும்பையில் பாலிவுட் படமான ரஜ்ஜோவின் இசை வெளியீட்டு விழா பிரபலநட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கலந்து கொண்டு இசையை வெளியிட்டார்.இதனையடுத்து பாஜக ஷிண்டேவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

பாட்னாவில் மோசமான குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்ததுடன் பலபேர் காயமடைந்துள்ள நிலையில் அங்குசென்று சட்ட ஒழுங்கை சீர்செய்யாமல் இசை வெளியீட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கலந்து கொண்டுள்ளதாக பாஜக தலைவர்களில் ஒருவரான சித்தார்த்நாத் கூறியுள்ளார்.

Leave a Reply