ஆறுபேர் உயிரை பலிகொண்ட பாட்னா தொடர் குண்டு வெடிப்புக்கு தார்மிக பொறுப்பேற்று பிகார் முதல்வர் நிதீஷ்குமார் பதவி விலகவேண்டும் என லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திங்கள் கிழமை அவர் கூறுகையில், “”பா.ஜ.க பேரணிக்கு போதுமான பாதுகாப்பை பிகார் அரசு வழங்க வில்லை என்பதை, இந்த தொடர்குண்டுவெடிப்பு வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. எனவே இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலகவேண்டும்.

அவர் தானாகவே முன்வந்து பதவி விலக வில்லை என்றால், மத்திய அரசு இதில் தலையிட்டு பிகார் அரசைக் கலைத்துவிட்டு, அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

புத்தகயை குண்டு வெடிப்பிலிருந்து நிதீஷ் அரசு துளியும்பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அதனால்தான் பாஜக பேரணிக்கு விரிவானபாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அது தவறிவிட்டது.

மாநிலத்தின் தலைநகரில் கூட மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்தகுண்டு வெடிப்பு உணர்த்தியிருக்கிறது” என்று தெரிவித்தார்.

பாஜக பிரதமர்பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு, பிகார் அரசு வேண்டுமென்றே போதியபாதுகாப்பை அளிக்காமல் தவிர்த்து விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர், முன்னாள்பிரதமர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சிறப்புப்படை பாதுகாப்பை நரேந்திர மோடிக்கும் வழங்க வேண்டும் எனவும், இதற்காக “எதிர் வரும் தேர்தலில் போட்டியிடும் பிரதமர்பதவி வேட்பாளருக்கும் இந்த வகைப் பாதுகாப்பை வழங்கலாம்’ என்று விதிமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüஹானும், “”நாட்டின் மிகப் பிரபலமான தலைவர் என்பதால், மோடிக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் சிறு ஒட்டை கூட இருக்கக்கூடாது. எனவே அவரது பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply