முன்னாள் பிரதமர் வாஜ்பாயை இழிவுப் படுத்தி பேசியதற்காக மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் பாஜக.வினர் செவ்வாய்க் கிழமை புகார் அளித்தனர்.

திருச்சி மாநகரக்காவல் ஆணையர் சைலேஷ் குமார் யாதவிடம் பாஜக. மாநிலச் செயலர் எம். சுப்பிரமணியம், கோட்ட பொறுப்பாளர் இல. கண்ணன் உள்ளிட்டநிர்வாகிகள் அளித்த புகார்மனுவில் தெரிவித்திருப்பது:

திருச்சி புத்தூரில் அக்டோபர் 26ம் தேதி நடைபெற்ற மத்தியஅரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனதுபேச்சில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை "அமரர்' என்று குறிப்பிட்டு பேசினார்.

இந்தபேச்சு பாஜக. தொண்டர்களின் மனதை புண்படுத்தி விட்டது. நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்து தற்போது நிதி அமைச்சராக பொறுப்புவகிக்கும் ப.சிதம்பரம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாகக் கூறிபேசுகிறார்.

இப்பேச்சுக்கு எந்த வித வருத்தமோ, மறுப்போ தெரிவிக்காமல் இருப்பது அவரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. வாஜ்பாயை இழிவுப் படுத்தும் வகையில் பேசிய சிதம்பரம்மீது வழக்குப்பதிந்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply