பெங்களூருவில், மாநில பாஜக., சார்பில் அடுத்த மாதம், மாபெரும்பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பாஜக., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி உரையாற்றுகிறார். இதற்காக, சிறப்புபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என, மாநில அரசிடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சிசெய்து வருகிறது. இதற்குமுன், ஆட்சியில் இருந்த, பாஜக ., உட்கட்சி பூசல்களால், மாநிலத்தில் ஆட்சியை இழந்தது. லோக்சபாதேர்தலை முன்னிட்டும், மாநிலத்தில் கட்சியை பலப்படுத்தவும், அடுத்தமாதம், 17ம் தேதி, பெங்களூரில், மாநில பா.ஜ., சார்பில், மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பாஜக ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி உரையாற்றுகிறார். பீகாரில், நரேந்திரமோடி கலந்துகொண்ட கூட்டத்தில், வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஆறுபேர் பலியாயினர்; 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல், மோடியை குறிவைத்தே நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், பாஜக .,வினர் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே, ‘மோடி, பெங்களூருவில் பங்கேற்கும்பேரணிக்கு, பலத்த பாதுகாப்பு அளிக்கவேண்டும்’ என, ஆளும் அரசிடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, பாஜக., செய்தித்தொடர்பாளர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: பீகார் குண்டு வெடிப்பு போல், மற்றொருசம்பவம் நடைபெற கூடாது. எனவே, பெங்களூருவில் நடைபெறவுள்ள பேரணிக்கு பலத்தபாதுகாப்பு அளிக்குமாறு, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். என்று ஜாவடேகர் கூறியுள்ளார்.

Leave a Reply