கடந்த ஞாயிற்றுக்கிழமை பாட்னாவில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணியில் குண்டுகள் வெடித்தது, பீகார் அரசின் பொறுப்பற்றத்தன்மையையும் பாதுகாப்பு குறைபாடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட ஒட்டுமொத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் கடுமையான குறைபாடுகள் இருந்தது தெரிய வந்துள்ளது.

காந்தி மைதானத்தில் குழுமியிருந்த பா.ஜ.க. தலைவர்கள், தொண்டர்கள், பொது மக்கள் ஆகியோருடன் செய்தியாளர்களும் ஒட்டுமொத்த பாதுகாப்பு குறைபாடுகளுக்குச் சாட்சியாக இருந்துள்ளார்கள். பேரணி இடத்துக்கு நுழைந்த ஆயிரக்கணக்கான மக்களைச் சோதனை செய்ய எந்த மெட்டல் கருவியும் இல்லை. ஒரு குண்டு மேடைக்கு 100 அடி தொலைவுக்குள் கண்டறியப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான இடத்தில் கூட வெடிமருந்துக்கான சோதனை நடத்தப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. அவசர, பாதுகாப்பு பயிற்சிகள் தரப்படவில்லை. போதுமான காவலர்கள் இல்லை. மைதானத்தில் தனியார் பாதுகாவலர்களே நிரம்பியிருந்தார்கள். இந்த உண்மைகளை வைத்துப் பார்க்கும்போது, முதல்வர் உட்பட பீகார் அரசின் அலட்சியத்தின் குற்றமும், பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை என்று முதல்வர் திரு நிதீஷ் குமார் கூறியதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதும் தெரிகிறது. பல்வேறு அறிக்கைகளை வைத்துப் பார்க்கும் போது, முதல்வரின் இந்த உறுதிமொழி தவறானது என்று புலப்படுகிறது. அக்டோபர் 1, 2013 அன்று உளவுத் துறை பீகார் மாநில காவல்துறை ஆணையர் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு எழுதிய கடிதத்தில் பல்வேறு நகரங்களை ஸ்தம்பிக்க வைக்க முஜாஹிதீன் அமைப்பு திட்டமிட்டுள்ளது என்று பொது எச்சரிக்கை விதித்திருந்தது. 23 அக்டோபர் 2013 அன்று திரு நரேந்திர மோதி பாட்னாவில் பேசவிருந்த பேரணி குறித்த ஒரு எச்சரிக்கையை சி.பி.ஐ., பீகார் காவல் துறைக்குத் தெரிவித்திருந்தது. இந்த எச்சரிக்கை இடம்பெற்ற கடிதத்தின் எண். v-111/PA/2013(3). மோதியின் பாட்னா வருகையை ஒட்டி இந்திய முஜாஹிதீன் அமைப்பு தாக்குதல் நடத்தக் கூடும் என்பதை எளிதாக ஊகிக்கும் அளவுக்கு அந்த எச்சரிக்கை தெளிவாக தெரிந்த்து. பத்கலின் கைதைப் பற்றிய அறிவுறுத்தலோடு மற்றொரு தரப்பிலிருந்து வந்த தகவலும் குறிப்பிடப்பட்டிருந்தது. முதல்வர்தான் இந்த்த் தோல்விக்குப் பொறுப்பேற்றிருந்திருக்க வேண்டும்.

இந்த பயங்கரவாத சம்பவத்தில் இந்திய முஜாஹிதீன் அமைப்புக்குத் தொடர்பிருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. ஹைதரபாதிலும் புத்த கயாவிலும் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கும் இந்த அமைப்புதான் காரணம் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் நடந்துள்ள பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் செயல்பட்டுள்ள அடிப்படைக் கருத்தியலும் படைகளும் ஒன்றேதான் என்று தெளிவாகிறது. ஐ.மு.கூ அரசு இந்தியாவில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்பதையும் இது காண்பிக்கிறது. யாசின் பட்கலைக் கைது செய்துவிட்டதன் முலம் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைத் செயலிழக்கச் செய்துவிட்டதாக அரசு பெருமைபட்டுக்கொள்கிறது ஆனால் பாட்னாவில் நடந்துள்ள் குண்டுவெடிப்புகள் இந்த பயங்கரவாத அமைப்பு இன்னும் செயலூக்கத்துடனும் செயல்பாட்டிலும் இருப்பது தெரியவந்துள்ளது. .

உள்நாட்டு மற்றும் அயலுறவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலான நிலையில் இருக்கிறது. காங்கிரஸால் ஆளப்படும் ஐ.மு.கூ அரசு 26/11 மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுத் தரத் தவறிவிட்டது. இந்திய அர்சு தான் வழங்கியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் 26/11 தாக்குதலை திட்டமிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைகளுக்குக்கு பாகிஸ்தான் இன்னும் செவிமடுக்கவில்லை. இருப்பினும் இந்தியா பாகிஸ்தானிடம் மென்மையான அணுகுமுறையையே கடைபிடிப்பது, பாகிஸ்தான் இந்தியாவை உதாசீனப்படுத்த வைத்துள்ளதோடு தொடர்ச்சியாக எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களை பல்வேறு படிநிலைகளில் அரங்கேற்றும் தைரியத்தையும் கொடுத்துள்ளது.

காங்கிரஸ் துணைத் தலைவர் திரு.ராகுல் காந்தியோ இந்த்த் தாக்குதை எதிர்கொள்ள அரசு தவறிவிட்டது என்ற உண்மையைத் திசை திருப்புவதற்கு பா.ஜ.க. மதக் கலவரத்தைத் தூண்டுகிறது என்று குற்றம் சுமத்தி, மக்களிடையே பிரித்தாளும் கொள்கையைக் கடைபிடிக்கிறார். வாக்குகளைக் கைப்பற்றுவதற்காக அரசியலில் மதத்தைக் கலப்பது, பிரிவினைவாதத்தை வளர்ப்பது ஆகியவற்றை காங்கிரஸ் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது. குறிப்பிட்ட அரசியல் கட்சிக்காக ஆட்சியைக் காப்பாற்ற நாடு பயங்கரவாதத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடாது என்று காங்கிரஸ் உணர்ந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற முயற்சிகள் முஸ்லிம் சமுதாயத்துக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த நாட்டுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது. தேர்தல் மற்றும் அரசியல் காரணத்துக்காக இந்த நாட்டின் உயர்ந்த இறையாண்மை நலன்களைப் பாதிக்கும் இதுபோன்ற அரசியல் கலாச்சாரத்தை வேரோடு களைவதே நாட்டின் தேவை. நல்லிணக்கத்துடன் கூடிய வளத்தை அடையும் விதத்தில் ஒட்டுமொத்த நாட்டையும் ஒருங்கிணைக்கும் உறுதி, புரிதல், திறமை கொண்ட அரசே நமக்குத் தேவை.

ஐ.மு.கூ. அரசும், பிரதமர் திரு மன்மோகன் சிங்கும் பொருளாதார விஷயங்களில் மட்டுமின்றி நாட்டின் பாதுகாப்பைக் காப்பாற்றுவதிலும் முடிவு எடுக்க இயலாமை மற்றும் திறமையின்மை ஆகியவற்றை நிருபித்துள்ளார்கள். திரு நரேந்திர மோதியின் தலைமையின் கீழ் 272+ இயக்கத்தில் உற்சாகமாகப் பங்கேற்று, 2014 ஐ.மு.கூ. அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டுமாறு நாட்டு மக்களுக்கு பா.ஜ.க. அழைப்பு விடுக்கிறது.

நன்றி; திரு. முரளிதர் ராவ்
பா.ஜ.க. தேசிய பொது செயலாளர்

Leave a Reply