டாக்டர் ஹர்ஷ் வர்தன் எழுதிய ஏ டேல் ஆஃப் டு ட்ராப்ஸ் (ஓஷன் புக்ஸ், புது தில்லி) என்ற புத்தகத்தின் திருத்தப்பட்ட பதிப்பு சமிபத்தில் வெளியானது.

இதன் மூல பதிப்பும் அதைத் தொடர்ந்து இதன் மறுமதிப்புகளும் புது மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்த்தன் எப்படி தில்லியில் பல்ஸ் போலியோ பிரச்சாரத்தை மேற்கொண்டார்

என்பதை நமக்கு விளக்குகின்றன. இதை அவர் 1994ல் அக்டோபரில் தொடங்கினார். அதைத் தொடர்ந்து மறு வருடம் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரது ஆதவுடன் இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த மருத்துவ அமைப்புகளையும் –அரசு மற்றும் அரசு சாரா – தில்லி மாடலை பின்பற்ற வைத்தார்.

இந்தப் புதிய பதிப்பு போலியோவுக்கு எதிராக இந்தியா நடத்தி வரும் போராட்டத்தையும் தற்போதைய நிலையையும் எடுத்துரைக்கிறது. மேற்கு வங்கத்தில் ஹவுரா என்ற இடத்தில் ஜனவரி 13-ஆம் தேதி துரதிர்ஷ்டவசமாக போலியாவால் ஒரு சிறு பெண் இறந்தாள். உலக சுகாதார அமைப்பின் விதிகளின்படி போலியோ அறவே இல்லாத நாடு என்ற அந்தஸ்த்தைப் பெற வேண்டும் என்றால் மூன்று வருடங்களுக்கு அந்த நோயால் ஒருவர்கூட பாதிக்கப்பட்டிருக்கக்கூடாது. 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி இந்தியாவும் போலியா ஒழிக்கப்பட்டுவிட்ட நாடு என்ற அந்தஸ்த்தைப் பெற்றுவிட்ட நாடுகளுள் ஒன்று சேர்வதை எதிர்பார்த்திருந்தது.

பல்ஸ் போலியோ பிரச்சாரத்தின் அதிரடியான வெற்றியால், இந்தியா ஏற்கெனவே போலியோ பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் பட்டியலிலிருந்து வெளி வந்துவிட்டது. இன்று வரை இந்தப் பட்டியலில் இருக்கும் நாடுகள் மூன்றுதான் – பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா – உள்ளன. 1994 ஆம் ஆண்டில் டாக்டர் ஹர்ஷ்வர்த்தனின் துணிச்சலான முனைப்பு இல்லாவிட்டால் இன்று இந்தப் பட்டியலில் இந்தியாவும் இருந்திருக்கும்.

சுகாதார நிபுணர்கள்சமூகத்திலிருந்து டாக்டர் ஹர்ஷ வர்த்தனுக்குத் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 1970களில் சின்னம்மை நோயை ஒழித்துக் கட்டிய பிறகு மனித  குலம் சந்தித்த மிகப் பெரிய பொது மருத்துவ முனைப்பு போலியோ தடுப்பு யுத்தம்தான். மிகப் பெரிய அளவும் மக்கள் தொகையும் கொண்டிருப்பதாலும், வளர்ச்சி நிலை மற்றம் நில அமைப்பு மாறுபாடுகளாலும் இந்தியாவை உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் விலக்கியே வைத்திருந்தனர். இதை 2012ல் பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்த இந்திய அரசு ஏற்பாடு செய்த, "போலியோ உச்சி  மாநாட்டில்" அவர்களே ஒப்புக் கொண்டனர். அந்த நிகழ்ச்சியில்,போலியோவிற்கான உலக சுகாதார அமைப்பின் துணை தலைமை இயக்குனர் டாக்டர் ப்ரூஸ் அயில்வர்ட் பேசும்போது 1990களில் ஒரு இளம் அதிகாரியாக தில்லிக்குப் பயணம் மேற்கொண்டபோது டாக்டர் ஹர்ஷ் வர்த்தனின் அர்ப்பண உணர்வையும் ஆற்றலையும் பார்த்து பிரமித்துப் போனேன் என்று  நினைவு கூர்ந்தார்.

பிரதிபலிப்புகள் Reflections

இந்தியாவின் போலியோ ஒழிப்பு வரலாறு எழுதப்படும்போது பொதுமக்களின் , பெண்கள், குழந்தைகளின் பங்கு – அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துணை நிலை ஊழியர்கள் ஆகியோர் தவிர – மகத்தானதாக நினைவுகூரப்பட வேண்டும் என்று ஒரு சமயம் டாக்டர் ஹர்ஷ வர்த்தன் கூறினார்.

"நாங்கள் கண்டுபிடித்த போலீயோ தடுப்பு மருந்து பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன். நமது அரசாங்கப் பள்ளிகளிலிருந்து பள்ளிக் குழந்தைகள் திரண்டிருந்தனர். மிகவும் பெருமித உணர்வுடனும் பொறுப்புணர்வோடும் வீடு வீடாகச் சென்று தங்கள் குழந்தைகளை பல்ஸ் போலியோ போடுவதற்கு அழைத்து வருமாறு கூறினர். இப்போது அவர்கள் எல்லாரும் பெரியவர்களாகி, அவர்களுக்கே குழந்தைகள் பிறந்திருக்கும். அவர்களுக்கு நான் நல்வாழ்த்து கூறுகிறேன். மனித குலம் சந்தித்து வரும் பல மருத்துவ பிரச்சினைகளுக்கான தீர்வு முனைப்புகளை இனி நான் தொடங்கும்போதும் தற்போதுள்ள புதிய தலைமுறை குழந்தைகளும் அதே உற்சாகத்துடன் எனக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்,' என்று டாக்டர் ஹர்ஷ வர்த்தன் கூறினார்.

"நிறைய எதிர்மறை கருத்துகளும் எதிர்ப்புகளும் இருந்தன" என்று அவர் நினைவுகூர்கிறார். தடுப்பு முறை மூலம் (நவீன இணைய வழி நடவடிக்கை, முக்கிய அரசு கூட்டங்களை வீடியோகிராஃபி செய்தல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அனைவருக்கும் கொண்டு  சேர்த்தல் முதலிய ) ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற இன்றைய எனது திட்டங்கள் செயல்படுத்துவது சாத்தியமானவை இல்லை என்று கூறுகிறார்கள். நான் பல்ஸ் போலியோ திட்டத்தை ஆரம்பித்தபோதும் இதே போன்ற எதிர்ப்பை சந்தித்தேன்,' என்கிறார்.

'என்னிடம் நிறைய பேர் இது மிகப் பெரிய அசாத்தியமான வேலை என்றார்கள். ஆனால் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று நினைப்பவன் நான். தேர்தல் ஆணையமும் அரசாங்கமும் பாலட் பேப்பர்களை இந்தியா முழுவதும் எங்கெங்கோ வெகு தொலைவில் உள்ள இடங்களில் இருக்கும் தேர்தல் சாவடிகளுக்கு ஒரே நாளில் கொண்டு சேர்த்து ஓட்டு போட வைக்க முடியும் போது, போலியோ சொட்டு மருந்துகளை எடுத்துச் செல்வது மட்டும் எப்படி அசாத்தியமானதாக இருக்கும்?"

" அரசியல் உறுதிப்பாட்டின் பின்னணில் உறுதியான நிர்வாகம் இருந்தால் எந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவந்துவிடலாம். மத்திய அரசின் அமைப்பாக இருப்பதால் தில்லி காவல் துறை தில்லி அரசோடு ஒத்துழைப்பதில்லை என்று பொதுவாக சொல்லப்படுகிறது. ஆனால், 1990களில் அப்போதைய தில்லி காவல் துறை ஆணையர் திரு கவுஷல் தனது 52,000 கான்ஸ்டபிள்களை பல்ஸ் போலியோ திட்டத்திற்காக அனுப்பி உதவி செய்ததோடு, எங்களின் பயன்பாட்டிற்காக நூற்றுக்கணக்கான ஜிப்சி வாகனங்களையும் அளித்து உதவினார். தில்லி ஊர்க்காவல் படையினரும், குடிமை பாதுகாப்பு அதிகாரிகளும் இதில் முக்கிய பங்காற்றினார்கள். எந்த வித குழப்பங்களும் ஏற்படவேயில்லை" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

"எல்லாவற்றையும்விட இதில் ஒரு பொது நோக்கம் இருந்தது. பல்வேறு துறை, நிலை, அந்தஸ்த்தைச் சேர்ந்தவர்களாக இருந்த எல்லோரும் இந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற துடிப்போடு அவரவர் முறையில் தங்களால் இயன்றவரை இதில் பங்கேற்றனர். ஒரு தலைவரின் பணியே தனித்தனியாக செயல்படும் ஆற்றல்களை இணைத்து அவர்களை பொது லட்சியத்திற்காகப் பயன்படுத்திக்கொள்வதுதான்," என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்கால உறுதியேற்பு

உலக சுகாதார அமைப்பு, ரோட்டரி ஃபவுன்டேஷன், லயன்ஸ் இன்டர்நேஷனல், இந்திய மருத்துவ அமைப்பு, சர்வ தேச லயன்ஸ் அமைப்பு மற்றும் பல மற்ற தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்து டாக்டர் ஹர்ஷ வர்த்தன் மிக உயர்ந்த விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் இன்று, "தடுக்கக் கூடிய நோய்களை தில்லியிலிருந்தும் இந்தியாவிலிருந்து ஒழித்துக்கட்ட ஓய்வொழிச்சல் இல்லாமல் தொடர்ந்து பாடுபடுவேன்" என்று கூறினார். இவர் பெற்ற விருது மழைகளில் இவர் மிக உயர்வாக நினைக்கும் விருது, பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியிடமிருந்து இவர் பெற்ற "ஸ்வாஸ்த்ய வர்தன்" என்ற பட்டம்தான்.

"உடல்நலம் என்பது கட்சி பாகுபாடில்லாத ஒரு விஷயம். ஏராளமான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போடும் இந்தியாவின் போலியோ சொட்டு மருந்து திட்டத்தை வெற்றியடைய வைப்பதில் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அரசியல் களத்தில் உள்ள நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் நான் கோரிக்கை விடுக்கிறேன். தில்லி மக்களுக்காக நான் தீட்டி வரும் குறிப்பட்ட திட்டங்களை இனி வரும் நாட்களில் வெளியிடுவேன். இந்த்த் திட்டம் ஒட்டுமொத்த உலகத்தையும் பொறாமைப்பட வைக்கும்" என்று அவர் கூறினார்.

Leave a Reply