தேசியபுலனாய்வு அமைப்பினர் விசாரணையின் போது தப்பிஓடிய பாட்னா குண்டு வெடிப்பு குற்றவாளி மெகர் ஆலம் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளான் .

குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான மோடி பங்கேற்ற பாட்னா பொதுக் கூட்டத்தில் தொடர்குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 6பேர் பலியாகினர். 80க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்தசம்பவம் தொடர்பாக இதுவரை 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர் யாசின்பட்கலின் கூட்டாளி தெஷீன் அக்தர் தான் இந்த குண்டு வெடிப்பின் மூளையாக செயல்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. போலீசாரிடம் சிக்கியவர்களில் மெகர் ஆலமை தேசியபுலனாய்வு அமைப்பினர் விசாரித்து வந்தனர். அப்போது கழிவறைக்கு செல்வதாக கூறி ஜன்னல்வழியே அவர் தப்பிவிட்டார். இது நாடுமுழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து உள்ளூர் போலீசிடம் தேசியபுலனாய்வு அமைப்பினர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் தப்பியோடிய மெகர்ஆலம் கான்பூரில் போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply