கர்நாடகாவில் ஆட்சிசெலுத்தி வரும் காங்கிரஸ் அரசு இன்னும் சிலமாதங்களில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு முஸ்லிம் சிறுமிகளுக்கு திருமண உதவித் தொகையாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளதற்கு பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது குறித்து பிரியாவிடை திட்டம் என்ற பெயரில் பெங்களூரில் பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நடத்தியபோராட்டத்தில் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா பங்கேற்றார். அவருடன் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

அப்போதுபேசிய எடியூரப்பா, “அரசின் இந்தஅறிவிப்பு, மைனாரிட்டி சமூகத்தினரிடையே ஒருவெறுப்பை உள்ளூர உருவாக்கும். சமூகத்தின் அனைத்து பிரிவினர்களும் நீதிமற்றும் சமூக நலனை பெறவேண்டும். அதற்காகவே நான் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன்” என்றார்.

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அபிமன்யூ கூறியதாவது:-

காங்கிரஸ் நாட்டில் ஆபத்தானவிளைவுகளை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. வாக்குவங்கி அரசியலை நடத்தும், காங்கிரஸ் நாட்டில் பிரிவினையை தூண்ட விரும்புகிறது. அரசு அனைத்துமக்களையும் சமமாக நடத்தவேண்டும். இது போன்று எதிர் விளைவுகளை உருவாக்கும் திட்டங்களை தொடங்குவதை காங்கிரஸ் உடனே நிறுத்தவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply