பாஜக. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள  நரேந்திர மோடி நாடெங்கும் சுற்றுப்பயணம்செய்து பொதுக்கூட்டங்களில் பேசிவருகிறார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவர் பேசிய பொதுக்கூட்டத்தில் இந்தியா முஜாகிதீன் தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தியதால் 6 பேர் பலியானார்கள்.

தேசிய புலனாய்வுக் குழுவினர் நடத்திய விசாரணையில், நரேந்திரமோடியை மனித வெடிகுண்டு மூலம் கொல்ல தீவிரவாதிகள் முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.

ஆனால், மத்திய அரசு மோடிக்கு இசட்பிரிவு பாதுகாப்பு கொடுக்க மறுத்துவிட்டது. இதனால் மோடிக்கு அதிகபட்சபாதுகாப்பு ஏற்பாடுகளை குஜராத் போலீசார் செய்துவந்தனர்.

இந்நிலையில் நரேந்திரமோடிக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரித்தது. நாளை அவர் பீகாருக்கு செல்லும்போது அவரை தாக்க தீவிரவாதிகள் திட்ட மிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் விஐபி.க்களுக்கு அளிக்கப்படுவது போன்று அவருக்கும் உச்சக்கட்ட பாதுகாப்புகொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அவர் எந்த ஊருக்குசென்றாலும் இனி சிறப்புபாதுகாப்பு படை வீரர்களின் வளையத்துக்குள் தான் இருப்பார்.

Leave a Reply