பீகார் குண்டுவெடிப்பில் அரசு அதிகாரியின் மகனுக்கு தொடர்பு மோடி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பீகார் அரசு அதிகாரிமகன் ஒருவனுக்கு தொடர்பிருப்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து தேசிய புலனாய்வுபடையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 27ம் தேதி மோடி பங்கேற்ற பொதுக் கூட்ட மைதானத்தில் 8 இடங்களில் குண்டுவெடித்தது. இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பினர் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக தெரியவந்தது

இந்நிலையில் ஒரு புதியதகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் பீகார் அரசுஅதிகாரி ஒருவரின் மகனான சதாம்உசேன் என்பவரிடம் விசாரித்தனர். பயங்கரவாதி தாபிஷ், பாட்னாவிற்குவந்து, அதிகாரியின் மகன் வீட்டில்தான் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

குண்டுவெடிப்பை நிகழ்த்த பயங்கரவாதிகள் 7ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் பாட்னா வந்துள்ளனர். இவர்கள் அதிகாரிமகன் மூலம் சிலஉதவிகளை பெற்றுள்ளனர். மேலும், அதிகாரியும், அவரதுமகனும் இந்தியன் முஜாகிதீன் அமைப்பிடம் தொடர்பில் இருந்ததாகவும்,குண்டுவெடிப்பதற்கு முன்னர், இருவரும், பயங்கரவாதிகளுடன் எஸ்எம்எஸ்., தகவல்களை பரிமாறி கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த அதிகாரி யார்என்ற தகவலை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர்.

Leave a Reply