கருத்து கணிப்புகளை கண்டு கலங்கும் காங்கிரஸ் மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், சத்திஸ்கர், மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மபி, ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துகணிப்புகளில் தெரிய வந்துள்ளது. டெல்லியிலும் பாஜக.,வுக்கு அதிகஇடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

5 மாநில தேர்தலில் காங்கிரஸ்கட்சி படுதோல்வி அடையும் என்று இது வரை எடுக்கப்பட்ட எல்லா கருத்து கணிப்புகளும் தெரிவித்துள்ளன. இதேநிலை பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொளிக்கும் என்று கூறப்படுகிறது.

இது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளிவந்தால், அது காங்கிரசின் வெற்றியை பாதிக்கும் என்ற பயம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தலைமைதேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு ஒருகடிதம் எழுதியுள்ளது. அதில் அவர்கள், ”கருத்துகணிப்புகள் மக்களுக்கு தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்துகின்றன. அவை ஒருசாராருக்கு சாதகமாக பயன் படுத்தியுள்ளன. எனவே, அதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இப்படியே போன தேர்தலில் மக்கள் வாக்களிப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பார்கள்.

Leave a Reply