பாட்னா குண்டுவெடிப்பில் இறந்த பயங்கரவாதி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர் . பீகார்மாநிலம் பாட்னாவில் கடந்த 27ம் தேதி குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் உட்பட 7 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் இறந்தனர். குண்டுவெடிப்பில்

தீவிரவாதி அய்னுல் அன்சாரி பலத்த காயமடைந்தான். சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக் கிழமை இறந்தான். அய்னுலின் உடல் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவனது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். ஜார்கண்ட் மாநிலத்தைசேர்ந்த அய்னுலின் தந்தை 70வயதான அதுல்லா அன்சாரி கூறுகையில், ”தீவிரவாத நடவடிக்கைகளில் அன்சாரி ஈடுபட்டு குண்டுவெடிப்பில் காயமடைந்தான் என்று கேள்விப்பட்ட உடனே, அவன் என்மகன் அல்ல என்று அறிவித்துவிட்டேன். அவனது உடலை வாங்கும்பேச்சுக்கே இடமில்லை” என்றார்.

ஒவ்வொரு குடும்பமும் அவர்கள் சார்ந்த சமூகமும் இப்படி தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை நிராகரித்தால், தீவிரவாத இயக்கங்களின் மீதான மதச்சாயம் தானாக மறையும் என்பதில் எந்த மாற்று கருக்கருத்தும் இல்லை.

Leave a Reply