காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் மன நலம் பாதிக்கப்பட்டவர் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் வைத்யா என்று கடுமையாக தாக்கியுள்ளார்.

திக்விஜய்சிங் அடிக்கடி ஆதாரமற்ற கருத்துகளை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது வழக்கம். கடந்த சிலதினங்களுக்கு முன்பு டுவிட்டரில் மோடிக்குபதிலாக சுஷ்மா பிரதமராகலாம் என தெரிவித்திருந்தார். இதற்கு சுஷ்மாவும் ராகுலுக்குபதிலாக திக்விஜய்சிங் பிரதமராகலாம் என பதிலடிகொடுத்தார். இப்படி எதாவது ஒரு செய்தியில் வரவேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்ததை உளறி கொட்டுவதில் வல்லவர்.

நேற்று திக்விஜய்சிங் தனது டுவிட்டர் இணையதளத்தில் தலிபான்கள் உள்பட பிறர் மீது வெறுப்புகொள்ள வைக்கும் வகையிலான கொள்கைகளை நான் கடுமையாக வெறுக்கிறேன். என்று இந்து அமைப்புகளை குறைகூறி இருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்வைத்யா கூறுகையில், திக்விஜய்சிங் கூறுவதை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர் நிலையான புத்தி உடையவர் கிடையாது. மன நலம் பாதிக்கப்பட்டவர். ஆனால் இந்த ஊடகங்கள் ஏன் திக்விஜய் சிங் கூறுவதை மிகவும் சீரியசாக எடுத்து கொண்டு வெளியிடுகின்றன என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply