தேர்தல்தோல்வி பயத்தின் காரணமாகவே காங்கிரஸ் கட்சி கருத்து கணிப்புகளுக்கு தடைகோரி வருகிறது என்று பா.ஜ.க குற்றம்சுமத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்துதெரிவித்துள்ள மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அருண்ஜேட்லி, “தேர்தல் கருத்துகணிப்புகள் என்பது பேச்சு சுதந்திரத்தின் ஓர் அங்கம்.

அதற்கு தடைவிதிப்பது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அனுமதிக்கத்தக்கதும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல.

சிலதேர்தல் கருத்து கணிப்புகளின் முடிவுதவறாகவும் செல்லலாம். அதற்காக கருத்து கணிப்புக்கே தடை விதிக்கவேண்டிய அவசியம் இல்லை. தேர்தலில் தோல்வி பயம் உள்ளவர்கள் தான் கருத்து கணிப்புகளுக்கு தடைகோருவார்கள்’ என்று கூறியுள்ளார்.

“”தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு தடைகோருவதன் மூலம் உண்மையை மறைக்க காங்கிரஸ்கட்சி முயற்சிக்கிறது. அடுத்ததாக, அரசியல் நோக்கர்களின் கருத்துகளுக்கும் அக்கட்சி தடைகோரும்” என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவ்டேகர் கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், “எதிர்வரவுள்ள, ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் மக்களவைத்தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்ட காரணத்தினால் காங்கிரஸ்கட்சி இது போன்ற கோரிக்கைகளை எழுப்பி வருகிறது’ என்று கூறினார்.

Leave a Reply