செவ்வாய் கிரகத்தை ஆய்வுசெய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்து விட்டது. மங்கள்யான் செயற்கை கோள் சரியாக 2. 38 மணிக்கு , ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி., ராக்கெட்மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியமைக்கு ஜனாதிபதி

பிரணாப்முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அரசியல் தலைவர்கள் , விஞ்ஞானிகள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

ரூ. 450 கோடி செலவில் இந்தியா தனதுசொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளது. மொத்தம் 200 மில்லியன் கி.மீ., பயணம்கொண்ட மங்கள்யான், திட்டமிடப்படி ஏவப்பட்டதால், வரும் 30ம் தேதி பூமியின் வட்டப் பாதையில் இருந்து விடுபட்டு, செவ்வாயைநோக்கி தனது நீண்ட பயணத்தை துவக்கும். அடுத்த 300 நாட்களில் செவ்வாயின் பாதையை நெருங்கும் மங்கள்யான் அடுத்த சிலதினங்களில் ( 2014 – செப் 24 ) சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். பிறகு அங்கிருந்து தகவல்களை பூமிக்கு அனுப்பும்.

இந்த செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தில், தண்ணீர், கனிமவளம், மனிதர் வாழ ஏற்றசூழ்நிலை உள்ளதா என்பது குறித்து, ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக, ஐந்து நவீனகருவிகள் “மங்கள்யான்’ செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றின்எடை, 15 கிலோ.

செவ்வாய் கிரகத்தின் மேல்பகுதியில் மீத்தேன் வாயு இருக்கிறதா என்பதை இதில் பொருத்தப்பட்டுள்ள கருவிதெரிவிக்கும். உலகளவில் இது மிகமுக்கிய சோதனையாகும்.

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவதில் இந்தியா வெற்றிபெற்று உலக சாதனை பட்டியலில் இந்தியா 4 வது நாடு என்றஇடத்தை பிடிகத்தது. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி கழகம்ஆகியன வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply