5 மாநில சட்ட சபைகளுக்கு விரைவில் தேர்தல்கள் நடக்க உள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5மாதங்களே உள்ளன.

இந்நிலையில் தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது

இதற்கு பாஜக எதிர்ப்புதெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக தனது இணையதளத்தில் கருத்து பதிவுசெய்துள்ள நரேந்திரமோடி ” என்னை கேட்டால், இதற்கு தீர்வு மிகவும் எளிமையானது.

காங்கிரஸ்சின் சர்வாதிகாரம் மற்றும் நாசதந்திரங்களை சம்மாளிக்க, நாம் ஜனநாயகத்திற்கு எதிரான காங்கிரஸ் கட்சியை கருத்துக் கணிப்பில் மட்டும் இன்றி வாக்குச் சாவடியிலும் புறக்கணிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது” என கூறியுள்ளார்.

Leave a Reply