விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க சார்பில் செஞ்சியில் பொதுகூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–

இன்று உலகம்முழுவதும் உள்ள தமிழன் பெருமைப்பட கூடிய நாள் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செவ்வாய்கிழமை செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா கூட்டமைப்பு என அடுத்தடுத்து 4–வதாக இந்த மாபெரும் சாதனையை நம் இந்தியநாட்டு விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர். அதற்காக இக்கூட்டத்தின் வாயிலாக அந்த விஞ்ஞானிகளுக்கு என் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட மக்கள் விரும்புகின்றனர். அரசியல் மாற்றம் ஏற்படவில்லையென்றால் இந்தியாவை காப்பாற்றமுடியாது, மக்கள் மோடி பிரதமராகவர விரும்புகின்றனர். காரணம் தற்போதுள்ள அரசு முற்றிலும்தோற்றுப்போய் உள்ளது.

1998–ல் வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்ற போது உலகரங்கில் உயர்ந்த நாடாக இந்தியாவை மாற்றிக்காட்ட முடியும் என்றார் அப்போது இந்தியாவில் அனுகுண்டு சோதனை நடத்தி உலகமே வியக்கவைத்தார்.

அவர் தொடங்கிவைத்த வெற்றிபயணம் இன்று செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்செல்லக் கூடிய அளவுக்கு உயர்ந்துள்ளது. எவ்வளவு விஞ்ஞானமாற்றம். வாஜ்பாய் ஆட்சியில் சீனா அடங்கி இருந்தது. பலமுறை போர் நடத்திய பாகிஸ்தானிடம் தனது நிலப்பரப்பை இழந்துதான் இந்தியா வெற்றிபெற்றது ஆனால் வாஜ்பாய் ஆட்சியின் போது நடந்த போரில் ஒரு அங்குல நிலப்பரப்பை கூட இழக்காமல் வெற்றிபெற்றோம்.

2010–11 ஆட்சியில் மாதம் ஒரு ஊழல் என கணக்கிலடங்காத ஊழல், குழுவாக சேர்ந்து ஊழல், இதில் பிரதமர், சிதம்பரம் ஆகியோரும் அடங்குவர்.

இலங்கை உள்பட அண்டைநாடுகள் இந்தியாவை மதிக்கவில்லை. இந்த அரசு இந்திய மக்களுக்கு பாரமான அரசாக உள்ளது. சீனா, இலங்கைவழியாக தீவிரவாதிகள் தமிழ்நாட்டில் நுழைந்து கோவில்களையும், தொழிற் கூடங்களையும் தடுக்க குறிவைக்கின்றனர். மத்திய அரசு செயல்படாத அரசாக உள்ளதால் ஊடுறுவல் நடைபெறுகிறது.

தமிழக மீனவர்கள் ஏன் தாக்கப் படுகிறார்கள். பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்தில் ஊடுறுவ தடையாக இருப்பதால் தமிழகமீனவர்கள் தாக்கப்படுகிறார்கள்.

கடந்த 2009ல் நீங்கள் செய்த தவறால் இலங்கையில் லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அத்வானி பிரதமராகவந்திருந்தால் இலங்கை தமிழர்கள் காப்பாற்றப் பட்டிருப்பார்கள். பிரபாகரன்மகன் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சி டி.வி.யில் காட்டப்பட்டது.

இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதற்காக கருணாநிதி வருத்தம் தெறிவித்திருக்கிறார். நான், கருணாநிதிக்கு ஒருவேண்டுகோள் வைக்கிறேன். 2008ல் தமிழகத்தில் உங்கள் ஆட்சி இருந்தபோது ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா யாருக்கும் தெரியாமல் எப்படி வேலூர் சிறைக்கு வந்துசென்றார் என்பதை கடிதமாக எழுத வேண்டும். அந்த சந்திப்புக்கு பின்தான் இலங்கை தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள். இதை தமிழ்மன்னுக்கு நீங்கள் தெரிய படுத்த வேண்டும். அது தவறு என்றால் அதற்கு நீங்கள் என்ன பரிகாரம் செய்யபோகிறீர்கள்? இந்திய அரசு எல்லா வகையிலும் இலங்கை தமிழர்களுக்கு துரோகம்செய்து கொண்டுவருகிறது.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்ககூடாது. இதனை வற்புறுத்தி அறிக்கை வெளியிட்ட கருணாநிதியை பாராட்டுகிறேன். இதேபோல் எதிர்ப்பு தெறிவித்துள்ள மத்திய அமைச்சர்கள் ஏகே.அந்தோனி, ஜெயந்திநடராஜன், நாராயணசாமி ஆகியோரையும் பாராட்டுகிறேன்.

மறைந்த தலைவர் மூப்பனாரின்மகன் மத்திய அமைச்சர் ஜிகே.வாசன் இலங்கை தமிழர் பிரச்சினையை முன் வைத்து அமைச்சரவையில் வெறியேற வேண்டும். எனவே இந்தியாவை காப்பாற்ற இலங்கை தமிழர்களை காப்பாற்ற நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும். அதற்கு நீங்கள் பாரதீய ஜனதாவிற்கு ஆதரவளிக்கவேண்டும். என்று பொன்.ராதா கிருஷ்ணன் பேசினார்.

Leave a Reply