பிரதமருக்கு இணையான பாதுக்காப்பை நரேந்திரமோடிக்கு வழங்கவேண்டும் என மத்திய அரசை பாஜ வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் கூடிய பாஜக ஆட்சிமன்றகுழு கூட்டத்தில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் மூலம் மோடிக்கு எதிராக சதிவலை

பின்னப் பட்டுள்ளதாக பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது. பாட்னாவில் மோடி பங்கேற்ற பொதுகூட்டத்தில் தொடர்குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதை சுட்டிக்காட்டிய பாரதிய ஜனதா மோடிக்கு உரியபாதுகாப்பை வழங்கவேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்று கூறியுள்ளது.

இதனிடையே பாட்னா குண்டு வெடிப்பு சம்பவத்தை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பினர் தமிழக போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ள போலீஸ் பக்ரூதினுடன் விசாரணை நடத்தாதது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. அக்டோபரில் மோடி சென்னை வரும் போது அவரை கொல்ல சதி திட்டம் தீட்டியத்தை போலீஸ் பக்ரூதின் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பாட்னா குண்டு வெடிப்பில் கண்டெடுக்கப்பட்ட பைப்வெடிகுண்டு போலீஸ் பக்ரூதினிடம் இருந்ததைபோல இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் அவனிடம் பயிற்சிபெற்றவர்கள் பாட்னா குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனிடையே நாடாளுமன்ற தேர்தலின்போது இந்தியாவில் உள்ள சிலீப்பெர்செல்கள் அனைத்தையும் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சதித் திட்டம் தீட்டி இருப்பதாக தகவல் வெளியகியுள்ளது.

Leave a Reply