நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக, கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட்ராமசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கோவையில் நிருபர்களுக்கு அளித்தபேட்டி:

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கொங்குபகுதியின் வளர்ச்சிக்கு அக்கறை செலுத்தும் கட்சியுடன் கூட்டணிசேர முடிவுசெய்தோம். பா.ஜ.க சார்பில் பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி தனது நிர்வாக திறமையால் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இதற்கு உதாரணம் குஜராத்மாநிலத்தின் வளர்ச்சி ஆகும்.

இதனால் பா.ஜ.க.,வுடன் கூட்டணிசேர முடிவுசெய்து, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கொங்குபகுதியில் உள்ள 12 தொகுதிகளில் 5 இடங்களை கேட்டுள்ளோம். எத்தனை இடம் என்பது ஜனவரியில் தெரியவரும். ஏற்காடு இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து ஓரிரு தினங்களில் அறிவிப்போம் என்றார்.

Leave a Reply