தமி ழக காவல்துறையினரால் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் பக்ருதீனிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு ஏஜென்சி) அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக விரைவில் அத்துறையினர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி, பிகார்மாநிலம் புத்தகயை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரித்துவருகிறது.

அந்த இருசம்பவங்களும் மோடியின் தேர்தல் பொதுக்கூட்டங்களை குறிவைத்து நடத்தப்பட்டதை என்.ஐ.ஏ உறுதிசெய்துள்ளது. அதற்கான ஆதாரங்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சேகரித்துள்ளதாக தெரிகிறது.

மேலும், ராஞ்சி, புத்தகயை, பாட்னா பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு சம்பவங்களில் பைப்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதால் அதை செய்தவர்களுக்கும் தமிழக காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் பக்ருதீனுக்கும் தொடர்பிருக்கலாம் என்று என்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இஸ்லாமிய சுதந்திர முன்னணி, அல்உம்மா என்ற அமைப்புகளுடன் பக்ருதீனுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் அவர் மூலம் ராஞ்சி, புத்தகயை சம்பவங்களில் துப்பு கிடைக்கலாம் என என்.ஐ.ஏ சந்தேகிக்கிறது. அதனால், அவரை காவலில் எடுத்துவிசாரிக்க அதிகாரிகள் முடிவுசெய்துள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.

"போலீஸ்' பக்ருதீனை தமிழக காவல் துறையின் குற்றப்புலனாய்வுத் துறையினர் கடந்த மாதம் கைது செய்தனர். அவர் கொடுத்த துப்புமூலம் புத்தூரில் பதுங்கியிருந்த பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மேலும் பக்ருதீனிடம் தமிழக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் "தமிழ்நாட்டில் எழுச்சிபெற்று வரும் இந்து தலைவர்களை கொல்ல முடிவுசெய்தோம்.

அத்வானி மதுரை வந்த போது திருமங்கலம் பாலத்துக்கு அடியில் பைப்குண்டு வைத்தோம். அதை காவல் துறையினர் கண்டறிந்து அகற்றினர். அடுத்தகட்டமாக தென்காசி குமாரபாடியன், வேலூர் வெள்ளையப்பன், சேலம் ஆடிட்டர்ரமேஷ் ஆகியோரை கொன்றோம்.

திருப்பதி பிரம்மோற் சவத்தையொட்டி சென்னையில் இருந்துசென்ற குடை ஊர்வலத்தைத் தடுக்க நாசவேலையில் ஈடுபடமுயன்றோம். பா.ஜ.க பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி சென்னை வரும்போது அவரைக் கொல்ல சதிசெய்தோம்.

அதற்குள் சிக்கிவிட்டோம்' என்று கூறியதாக மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த பின்னணியில் பக்ருதீனை காவலில் எடுத்துவிசாரிக்க என்.ஐ.ஏ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply